முக்கிய செய்திகள்

மூன்று இடங்களில் பெரியார் சிலை அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சதியே! காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்
கழகத் தோழர்களே, அழுக்குருண்டை பிள்ளையார்ப ற்றி பிரச்சாரம்
புயல் வேகத்தில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!
தந்தை பெரியார் பிறந்த நாளை தமிழின விழாவாக வீட்டுக்கு
வீடு கொண்டாடுவோம், கொண்டாடுவோம்! தமிழர் தலைவர் அறிக்கை

தந்தை பெரியார் சிலை மூன்று இடங்களில் சேதப்படுத்தப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

திருச்சி அண்ணா நகரில் இருந்த தந்தை பெரியார் சிலையும், அந்தப் பகுதியிலே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையும் ஒரே சமயத்தில் (கடந்த செவ்வாய்க் கிழமை இரவு) விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

  மேலும்

பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை
பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆராய்ச்சி கருத்து

புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், சர் அய்சக் நியூட்டன் இருந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

காலத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு எனும் இவருடைய நூல் 1988 இல் எழுதப் பெற்றது. அந்நூல் இவருடைய புகழை உயர்த்தியது. பன்னாட்டு அளவில் மிக அதிகம் விற்ற நூல்களில் அதுவும் ஒன்று. தமிழ் உள்படப் பல மொழிகளில்

  மேலும்

திமுக ஆட்சி மாறாது; அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேறும்; போராட்டம் வேண்டாம்! முதலமைச்சர் கலைஞர் விளக்கம்

சென்னை, செப். 3 யாருக்குமே எந்த வித மான சிரமமும் இல்லா மல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் எனது சிந்தனை. அதற் காகத்தான் இந்த வயதி லும் இரவு பகலாக உழைக்கிறேன், சிந்திக் கிறேன். யாருக்கு என்ன செய்தால், அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படும் என்றுதான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.

தேர்தல் நெருங்குகிறதே, ஆட்சி மாறி விடுமோ என்று எண்ணி யாரும் போராட்டம் நடத்த வேண்டாம். திமுக ஆட்சி தொடரும். மாறாது. அனைவரின் கோரிக்கை களும் நிறைவேறும் என்று கூறியுள்ளார் முதல்வர் கலைஞர்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இந்தியாவில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 3 மடங்கு உயரும்
ஆய்வு அறிக்கை தகவல்

பாஸ்டன், செப்.3 இந்தியாவில் இணையதளம் உபயோகிப் போர் எண்ணிக்கை அடுத்த அய்ந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று தெரிகிறது. பாஸ்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இப்போது 8.10 கோடி பேர் இன்டர்நெட் உபயோகிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 23.70 கோடியாக உயரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடக்கவிழா
நிதியமைச்சர் பேராசிரியர் தொடங்கி வைக்கிறார்
தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை, செப்.3- திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் தொடக்க விழா நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுச் செய லாளர் - நிதியமைச்சர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

திராவிடர் மய்ய பணிகள்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் நோக்கங்கள், பணிகள் பற்றிய விவரம் வருமாறு:

 




கருத்துப்படம்


online counter
Viduthalai Publications
© Copyright 2010 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai