பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை
பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி
ஸ்டீபன் ஹாக்கிங்
ஆராய்ச்சி கருத்து
புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், சர் அய்சக் நியூட்டன் இருந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
காலத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு எனும் இவருடைய நூல் 1988 இல் எழுதப் பெற்றது. அந்நூல் இவருடைய புகழை உயர்த்தியது. பன்னாட்டு அளவில் மிக அதிகம் விற்ற நூல்களில் அதுவும் ஒன்று. தமிழ் உள்படப் பல மொழிகளில் அந்நூல் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. கடவுள் கருத்து அல்லது தெய்வீகம் என்பது பிரபஞ்சத்தைப்பற்றிய அறிவியல் புரிதலுக்கு முரண்பட்டது அல்ல என அந்நூலில் எழுதியிருந்தார்.
ஆனால், 2010 செப்டம்பர் 2 இல் சில பகுதிகள் வெளியிடப்பட்ட தி கிராண்ட் டிசைன் (கூந ழுசயனே னுநளபை) எனும் நூலில், இயல்பியலில் ஏற் பட்டுள்ள தொடர்ந்த வளர்ச்சிகளின் காரண மாக, பிரபஞ்சப் படைப்புப்பற்றிய கோட்பாடு களில் இனிமேல் கடவுளுக்கு எந்த இடமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளார்.
பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான், என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

தி டைம்ஸ் ஆஃப் இண்டியா (
3.9.2010)
ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும், படைத்துக் கொள் ளும். தானாக நிகழும் படைப்பின் காரணமாக, எதுவுமற்றது என்பதைவிட ஏதோ ஒன்று இருக்கிறது என்பதும், பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்பது, நாம் ஏன் இருக்கிறோம் என்பதும் புலனாகிறது என ஹாக்கிங் எழுதியுள்ளார்.
வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப் பிற்குக் கடவுளைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவையில்லை என்கிறார், ஹாக்கிங்.
தமது 21 ஆம் வயதில், மோட்டார் நியூரான் எனும் நரம்புத் தொடர்பான நோய்க்கு ஆளான ஸ்டீபன் ஹாக்கிங் நாற்காலியில் அமர்ந்த வண்ணமே நாள்களைச் செலுத்துகிறார். குரல் இணைப்பு (சிந்த்தசைசர்) எனும் எந்திரத்தைப் பயன்படுத்திப் பேசுகிறார்.
1992 ஆம் ஆண்டில், சூரிய மண்டலத்திற்கு வெளியில் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றிவரும் கோள் (கிரகம்) கண்டுபிடிக்கப்பட்டது. குழப்பத்தில் (ஊயடிள) இருந்து உலகம் தோன்றியிருக்க இயலாது என்ற அய்சக் நியூட்டனின் நம்பிக்கைக்கு எதிரான ஒரு திருப்பு முனையாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது.
சூரியனுக்கும் புவிக்கும் இடையில் உள்ள தொலைவு மற்றும் சூரியனின் நிறை (எடை) ஆகியன (மனித வாழ்வுக்குப்) பொருத்தமான வகையில் அமைந்திருக்கின்றன. இத்தகைய நம்முடைய கோளின் (புவியின்) நிலைகள் தற் செயலாக நிகழ்ந்துள்ளன என்பதை 1992 ஆம் ஆண்டு கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது. ஆகை யால், மனிதர்களை மகிழ்விக்கக் (கடவுளால்) புவி கவனமாக வடிவமைக்கப்பட்டது என மெய்பிப் பதற்கு உரிய அவ்வளவு தனிச் சிறப்பு வாய்ந்த மற்றும் உறுதியான தடயமாக நமது கோளின் (சாதகமான) நிலையைக் கொள்ள முடியாது என ஹாக்கிங் எழுதியுள்ளார்.
புவியின் வளங்கள் தீர்ந்து போகும் வகையில் மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள், மற்றும் பயங்கரமான புதிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறார்கள். ஆகையால், நீண்ட காலம் மனித இனம் நீடிக்க வேண்டுமென்றால் அவர்கள் பிரபஞ்ச வெளியில் குடியேறவேண்டும் என இந்த ஆண்டு (2010) தொடக் கத்தில் ஹாக்கிங் கூறினார்.
அண்டவெளியில் உள்ள அந்நிய உயிர் களுடன் தொடர்பு கொள்வதை மனிதர் கள் தவிர்க்கவேண்டும் என்றும், அத்தகைய தொடர்பின் விளைவு பேரழிவு தரக்கூடிய தாக இருக்கும் என்றும் அண்மையில் ஒரு தொலைக்காட்சி உரை யில் ஹாக்கிங் குறிப் பிட்டார்.