இந்தியாவில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 3 மடங்கு உயரும்
ஆய்வு அறிக்கை தகவல்

பாஸ்டன், செப்.3 இந்தியாவில் இணையதளம் உபயோகிப் போர் எண்ணிக்கை அடுத்த அய்ந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று தெரிகிறது. பாஸ்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இப்போது 8.10 கோடி பேர் இன்டர்நெட் உபயோகிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 23.70 கோடியாக உயரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதளம் உபயோகிப்பாளர் எண்ணிக்கை நூறு கோடி' என்ற ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் 2015 ஆம் ஆண்டில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 120 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இணையதளம் உபயோகிப்பாளர் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும்.

2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 6.10 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டில் இந்த நாடுகளில் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இது 19 சதவிகித அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள்தான் மிகக் குறைவாக இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 30 நிமிடம் மட்டுமே இந்தியர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இணையதளம் உபயோகிப்பதற்கான கட்டணம் குறையும்போது உபயோகிக்கும் நேரம் அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கணினியை உபயோகிப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், செல்பேசி மூலமான இணையதள சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் சிறையிலிருந்து மேலும் 100 இந்திய மீனவர்கள் விடுதலை

இஸ்லாமாபாத், செப்.3 பாகிஸ்தான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 100 பேர் வியாழக்கிழமை விடுவிக்கப் பட்டனர். தண்டனைக் காலம் முடிந்த 442 மீனவர் களை விடுவிக்க பாகிஸ் தான் முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட் டனர். இப்போது மேலும் 100 மீனவர்கள் விடுவிக்கப் பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் கராச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு இவர்கள் வெள்ளிக்கிழமை வந்தடை வர் என்று தெரிகிறது. அடுத்த கட்டமாக இம் மாதம் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் எஞ்சியுள்ள மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கடல் எல்லையி லிருந்து விலகி, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந் ததால் இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும் பாலானோர் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களாவர். சிலருக்கு 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர். பாகிஸ் தானைச் சேர்ந்த தன்னார்வ மையம் தொடுத்த வழக்கில், தண்டனைக் காலம் முடிந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனடிப் படையில் இவர்கள் விடு தலை செய்யப்பட்டனர்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 


சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai