திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடக்கவிழா
நிதியமைச்சர் பேராசிரியர் தொடங்கி வைக்கிறார்
தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை, செப்.3- திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் தொடக்க விழா நிகழ்ச்சியில், தி.மு.க. பொதுச் செய லாளர் - நிதியமைச்சர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

திராவிடர் மய்ய பணிகள்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் நோக்கங்கள், பணிகள் பற்றிய விவரம் வருமாறு: 1.திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்கமளிப்பது, 2.திராவிடர் வரலாற்று ஆய்வாளர் களுக்குப் பாராட்டு, 3.திராவிடர் வரலாறு பற்றிய தவறான கருத்து களுக்கும், 4.திரிபு வாதங்களுக்கும் மறுப்பு, 5.திராவிடர் வரலாறு பற்றி கருத்தரங்குகள், 6.திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு, 7.திரா விடர் வரலாற்றைக் கூறும் பருவ இதழ் நடத்துதல், 8.திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவர்களை உறுப்பினர் ஆக்குதல் (மய்யத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டது), திராவிடர் வரலாறு பற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தல், புதிய ஆய்வு நூல்களை வெளியிடுதல் ஆகியவை இம்மய்யத்தின் நோக்கங்களாகும்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழா 7.9.2010 அன்று மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் முனைவர். அ.இராமசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான முனைவர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் முனைவர் பேரா சிரியர் ந.க.மங்கள முருகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைமையகச் செயலாளர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அறிமுக உரையாற்று கிறார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை தொடங்கி வைத்து தமிழக அரசின் நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் மிகச் சிறப் பானதொரு எழுச்சி உரையாற்று கிறார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மய்யத்தின் இணைச் செயலாளர் முனைவர் பேராசிரியர் ப.இரா. அரங்கசாமி நன்றியுரையாற்றுகிறார். மய்யத்தின் பொருளாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கவிருக்கிறார்.


நகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து  

 


சென்னை:

  • பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்
  • பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்
  • பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்
  • பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்
  • பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)
  • பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு
  • மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)
  • பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
  • பெரியார் இலவச சட்ட உதவி மய்யம்

திருச்சிராப்பள்ளி:

  • நாகம்மை குழந்தைகள் இல்லம்
  • பெரியார் தொடக்கப்பள்ளி
  • பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  • நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  • பெரியார் கணினி மய்யம்
  • பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  • பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூர்:

  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
  • பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  • பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  • பெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  • பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

மருத்துவமனைகள்:

  • பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை
  • புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.
  • பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  • பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்
  • டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்

புதுடில்லி:

  • பெரியார் மய்யம், பாம்நோலி
  • பெரியார் மய்யம், ஜசோலா

 

Viduthalai Publications
© Copyright 2010 www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai